Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று முதல்…. பள்ளிகள் திறப்பு…!!

தமிழகம் முழுவதும் இன்று அரசு வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் திறக்கப்படுகின்றது.

தமிழகத்தில் கொரோனா பரவல்  காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து   பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பு பிறகு இன்று தமிழகம் முழுவதும் 10 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவு கடிதத்துடன் மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர். பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும். ஒரு வகுப்பறைக்கு 25 மிகாமல் செயல்படவும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

Categories

Tech |