Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… மாணவர்கள் கட்டாயம் இதை செய்யணும்…!!!

தமிழகம் முழுவதிலும் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவற்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்தது.

அதனால் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 90 சதவீதம் பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றன. அதனால் மாணவர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் மதிய உணவு மற்றும் குடிநீர் பாட்டிலை வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும். வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே இடைவெளி நேரம் வழங்கப்படவேண்டும். மாணவர்களுக்கு இடையே உணவு பகிர்வு அனுமதிக்கக் கூடாது. கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது மிகவும் அவசியம். இவ்வாறான பல்வேறு நெறிமுறைகளை தமிழக அரசு மாணவர்களுக்கு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |