குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் பல்வேறு ஆஃபர்களை வழங்கிவருகின்றனர். அந்த வகையில் ரியல்மி நிறுவனம் ஜனவரி 20 – 24 வரை ரியல் பப்ளிக் சேல் என அதிரடி சலுகை விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த 4 நாள் விற்பனையின் போது ரியல்மியின் 12 ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ரியல்மி சி 12 மற்றும் ரியல்மி சி 3 மாடல்களுக்கு ரூ.500 தள்ளுபடியும், ரியல்மி சி 15 மற்றும் ரியல்மி சி 15 குவால்காம் எடிஷனுக்கு ரூ.1,000 தள்ளுபடியும் வழங்குகிறது.
மேலும், ரியல்மி சி 12 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்ட் மற்றும் ரியல்மி சி 3 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி / 32 ஜிபி வேரியண்ட் ரூ.8,499க்கும் கிடைக்கும்.
ரியல்மே சி 15 / சி 15 குவால்காம் எடிஷனின் 3 ஜிபி / 32 ஜிபி வேரியண்ட் ரூ.8,999 க்கும், 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்ட் ரூ.9,999 க்கும் விற்பனையாகவுள்ளது.
அதேபோல், ரியல்மே 7, 7 ப்ரோ மற்றும் நார்சோ 20 ப்ரோ மாடல்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும். ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ போன்களுக்கு ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மியின் இந்த சேல் அதன் சொந்த இணையதளமான ரியல்மி.காம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் நடைபெறவுள்ளது. இது நாளை அதிகாலை 12 மணிக்கு தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.