பெண் ஒருவர் ஏரியில் சடலமாக அவசர சேவை பிரிவினரால் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டல அவசர சேவைப் பிரிவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் துன் ஏரியில் இருந்து பெண் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2: 30 மணியளவில் துன் ஏரியில் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவசர சேவை பிரிவினருடன் இணைந்து மிக விரைவாக செயல்பட்டு சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு சேர்த்தனர்.
மேலும் மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் உட்பட எந்த தகவலும் தெரியவில்லை. எனவே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அந்தப் பெண்ணுக்கு 20 முதல் 40 வயது இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அப்பெண் லண்டனின் இசைக்கலைஞர் ஒருவருடைய பெயரை பச்சை குத்தி இருப்பதாகவும் அதனுடன் ஆந்தையின் உருவமும் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே இந்த தகவலின் அடிப்படையில் பொதுமக்கள் யாருக்காவது தகவல் கிடைத்தால் தங்களிடம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.