கல்லூரி மாணவி மனமுடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் லூர்துமாதா தெருவில் வசிப்பவர் மேரி ஸ்டானிஸ்டா. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மேரி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தன் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுபற்றி கன்னியாகுமரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவி மேரி ஸ்டானிஸ்டா தற்கொலை செய்து கொண்டதன் காரணம் என்ன என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.