Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீவா – அருள்நிதியின் ‘களத்தில் சந்திப்போம்’… ரிலீஸ் எப்போ தெரியுமா?…!!!

நடிகர்கள் ஜீவா-அருள்நிதி நடிப்பில் தயாராகியுள்ள ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகர்களாக வலம் வரும் ஜீவா , அருள்நிதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘களத்தில் சந்திப்போம்’ . நடிகர் ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது . இந்தப் படத்தை ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும்,  நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் நடித்துள்ளனர் . மேலும் இந்தப்படத்தில் பாலசரவணன் ,ஆடுகளம் நரேன் ,ரோபோ சங்கர் ,ரேணுகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

Kalathil Sandhippom (2021) | Kalathil Sandhippom Movie | Kalathil  Sandhippom Tamil Movie Cast & Crew, Release Date, Review, Photos, Videos –  Filmibeat

அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் ‌. நட்பை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் அருள்நிதி, ஜீவா இருவரும் நண்பர்களாக நடித்துள்ளனர் .கொரோனா பரவல் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தாமதமானது . இந்நிலையில் ‘களத்தில் சந்திப்போம்’ படம் வருகிற தைப்பூசத் திருநாளில் (ஜனவரி 28)  தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Categories

Tech |