மத்திய கலாச்சார அமைச்சகம் ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவானது கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.
நாட்டுக்காக பங்காற்றிய தலைவர்களில் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை ஒவ்வொரு தினமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் விழாவை ஜனவரி 23ஆம் தேதி கொண்டாட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
மேலும் இதனைப் பற்றி மத்திய கலாச்சார அமைச்சகம் கூறும்போது, பராக்கிராம் திவாஸ் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.