Categories
தேசிய செய்திகள்

எல்லா பக்கமும் பனி மூட்டம்… கண்ணே தெரியல…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கடுமையான குளிர் நிலவுவதால் டெல்லியில் வாகனங்கள் கண்ணுக்குத் தென்படாத வண்ணம் சாலையில் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.

வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த குளிர்காலங்களில் காலை வேளையில் பனி மூட்டமானது அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் டெல்லியில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பனிமூட்டமானது அதிக அளவில் காணப்பட்டதால் அங்கு சாலைகளில் வாகன ஓட்டிகள் வண்டிகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

மேலும் இந்த கடும் குளிர் காரணமாக வெளியில் வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் இன்று காலை டெல்லியில் 8.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Categories

Tech |