தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை திருட முயற்சி செய்த 2 மர்ம நபர்களுக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர். மளிகை கடை வைத்து நடத்தி வரும் இவர் தன் இரு சக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். தனியாக நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் 2 பேர் திருட முயற்சி செய்தனர்.
அதனை கண்ட நாகராஜ், தன் நண்பர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் வாகனத்தை திருட முயற்சி செய்து கொண்டிருந்த இரண்டு மர்ம நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன்பின் போலீசாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு திருடர்களையும் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் தனியாக நிற்கும் வாகனங்களை நோட்டமிட்டு, அவற்றை திருடி வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.