Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தண்ணீர் இல்லை…. சாலை மறியலில் இறங்கிய மக்கள்…. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு….!!

கண்மாய் தண்ணீரை மறித்து திருப்பி விட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை, இளையான்குடி பகுதியில் உள்ள சோதுகுடியில் நேற்று பகல் 2 மணியளவில் திடீரென கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 அரசு பேருந்துகளை நிறுத்தி கோஷமிட்டனர். திடீரென கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சோதுகுடி கண்மாய்க்கு வரும் தண்ணீரை கால்வாயில் மறி த்து புதூர் ஊருணிக்கு திருப்பிவிட்டதால் தங்கள் கன்மாய் நிரம்பவில்லை. எனவே தங்கள் கண்மாய் தண்ணீரை திருப்பிவிட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்டோம் என கூறினர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கண்மாய் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர் இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |