Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விடாமல் அழுத குழந்தை… விமானத்திலிருந்து இறங்கிய பெண்… விமான நிலையத்தில் பரபரப்பு…!!

கைக்குழந்தை விடாமல் அழுததால் பெண் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு அதன் பின்னர் மற்றொரு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 106 பயணிகளுடன் பகல் 12:15 மணிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் டெல்லியில் வசித்து வரும் லட்சுமி தேவி-ராகுல் தம்பதியினரும், அவர்களது நான்கு மாத பெண் குழந்தையுடன் அந்த விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டனர். இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு அதன் பின்னரே டெல்லி செல்வதற்காக விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த குழந்தை இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்ததால் அதன் அழுகையை நிறுத்தும் படி விமான பணிப்பெண்கள் லட்சுமி தேவியிடம் கூறினர். ஆனால் எவ்வளவு முயன்றும் லட்சுமிதேவியினால் அந்த குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாததால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.

இதனை அடுத்து தான் விமானத்திலிருந்து இறங்கி விடுவதாக லட்சுமிதேவி கூறியதன பின்னர், விமானத்திலிருந்து கைக்குழந்தையுடன் அவரை இறக்கி விட்டனர். அதன்பின் அவர் கணவர் ராகுல் மட்டும் டெல்லிக்கு அதே விமானத்தில் புறப்பட்டார். மேலும் இந்த விமானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் 15 நிமிடங்கள் தாமதமாக அந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டது. இதனைதொடர்ந்து விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட அந்த பெண் விமான நிலையத்தில் உள்பகுதியில் தங்க வைக்கப்பட்டு, அதன் பின்னர் டெல்லிக்கு செல்லும் மற்றொரு விமானத்தில் லட்சுமி தேவியை கைக்குழந்தையுடன் அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |