நடிகர் விஜய் சேதுபதிக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதையடுத்து பல ஹிட் திரைப்படங்கள் கொடுத்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார் . மேலும் விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் . சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும், சீதக்காதி படத்தில் வயதானவராகவும் , விக்ரம் வேதா ,பேட்ட ,மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியுள்ளார் .
இந்நிலையில் பாலிவுட் படங்களில் பிசியாகி வருகிறார் விஜய் சேதுபதி . இவருக்கு அடுத்தடுத்த ஹிந்தி பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது . சந்தோஷ் சிவன் இயக்கும் மும்பை கார், மாஸ்டர் ஹிந்தி ரீமேக் ,கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ் ,அந்தாதூன் இயக்குனருடன் ஒரு படம் என வரிசையாக நடித்து வருகிறார். மேலும் ஷாகித் கபூருடன் இணைந்து வெப் தொடரிலும் நடிக்க உள்ளார். இது தவிர இன்னும் சில படங்களில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது .