Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அந்த மாதிரி காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன்’… கோபத்துடன் கூறிய கீர்த்தி…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார் .

மலையாள திரையுலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கீதாஞ்சலி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ் . பின்னர் தமிழில் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார் . இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த ரஜினி முருகன் படம் சூப்பர்  ஹிட் ஆனது . இந்தப் படத்தின் மூலம் பிரபலமடைந்த கீர்த்தி விஜய் ,சூர்யா ,தனுஷ், விஷால் போன்ற ஹீரோக்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

Savithri: Keerthi Suresh gains weight to play actress Savitri in Mahanati |  Malayalam Movie News - Times of India

தற்போது இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் . நடிகை கீர்த்தி கவர்ச்சி அல்லாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் மகேஷ் பாபு படத்தில் நீச்சல் உடையில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை மறுத்த கீர்த்தி சுரேஷ் இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம் . இதுபோன்ற காட்சிகளில் நான் எப்போதும் நடிக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறியுள்ளார் .

Categories

Tech |