தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியும் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் உள்ள சுப்புராஜ் நகரில் வசிப்பவர் கருப்பையா. இவருடைய மகளின் பெயர் நித்யா. பட்டப்படிப்பு முடித்துவிட்டு இவர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் நித்யாவுக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.
ஆனால் அவர் தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது நித்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போடி டவுன் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.