ட்ரம்பின் ஆதரவாளரின் ட்விட்டர் கணக்கு விளக்கமின்றி முடக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாஷிங்டனின் ஜார்ஜியா மாகாணத்தில் குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் மார்ஜோரி டெய்லர் கிரீன்(46). இனவெறி கருத்துக்களை ஆதரிக்கும் விதத்தில் செயல்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் இவரின் கணக்கை முடக்கியுள்ளது. இந்நிலையில் இவர் தன் ட்விட்டர் கணக்கு காரணமின்றி மூடக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அதாவது தொழில் அதிபரான இவர் அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ளார். மேலும் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான கிரீன் பழைமைவாத கருத்துக்களையும் ஆதரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதிலிருந்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியானது ஜார்ஜியா தேர்தல் அலுவலர்களை கண்டிக்கும் வகையிலும் தேர்தல் மோசடிகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டும் வகையிலும் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ட்விட்டர் தொடர்புடைய ஸ்க்ரீன் ஷாட்டுகள் சிலவற்றையும் பகிர்ந்துள்ளார்.
அதன் பிறகு தன் ட்விட்டர் 12 மணி நேரமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் பேச்சு மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வன்முறை சம்பவத்திற்கு பின்பு QAnon என்ற பரப்புரை அமெரிக்காவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து இதனோடு சம்பந்தப்பட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியுள்ளது. அதற்கு முன்பாக அதிபர் டிரம்ப்பின் கணக்கையும் ட்விட்டர் நிறுவனம் முடக்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளரின் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கிரீன் ட்விட்டர் கணக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான விளக்கம் ட்விட்டர் நிறுவனத்தால் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.