அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி சத்திர தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். சண்முகம் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து சண்முகம் முதலுதவி சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சண்முகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் அவருடைய மகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.