Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு… ரஜினிக்கு சம்மன்… காணொளியில் ஆஜராக விருப்பம்..!!!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணையில் காணொளி மூலமாக ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவருடைய வக்கீல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு, தடியடி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதைதொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இதில் தற்போது வரை பல கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலையில் ஆணையம் முன்பு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த் இன்று நேரில் ஆஜர் ஆவாரா அல்லது வக்கீல் மூலம் அபிடவிட் தாக்கல் செய்வாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு ரஜினிகாந்துக்கு பதிலாக அவருடைய வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார். பின்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு காணொளியில் ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |