டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் தமிழகத்தில் நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை திறந்து வைக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் படியும் கோரிக்கை வைத்ததாக அவர் தெரிவித்தார்.
சசிகலா விடுதலை தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சசிகலா அதிமுக காட்சியிலேயே இல்லை என்றும், அவர் விடுதலை ஆனாலும் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் வேட்பாளர், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பாஜக தலைவர் பேசுவது குறித்த கேள்விக்கு பாஜக தலைவர்கள் தற்போது பேசுவது அவர்களது தொண்டர்களை உற்சாகப்படுத்த தான். எல்லா கட்சியின் தேர்தல் நேரத்தில் அதை தான் செய்யும் என்று பதிலளித்துள்ளார்.