நடிகர் சிவகார்த்திகேயனை பிரபல நடிகை ஒருவர் ஆங்கிலத்தில் பேச வைத்திருக்கிறார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அயலான்’ . இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார் . கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் அயலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும் கடைசி மூன்று நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் .
Happy to work with you @Rakulpreet ❤️ and thanks for making me talk in English all the time ( I think i speak Britis Englis 🙄😂)😃😃🙏 https://t.co/6Gv0R7vL5W
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 19, 2021
மேலும் இயக்குனர் ரவிக்குமார் ,நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம் என்று பதிவிட்டுள்ளார் . தற்போது இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் ‘உங்களுடன் பணிபுரிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. குறிப்பாக நீங்கள் என்னை படப்பிடிப்பு நேரத்தில் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி . நான் பேசியது பிரிட்டிஷ் இங்கிலீஷ் என்று நினைக்கிறேன் ‘ என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார் .