வரலாற்றுத் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.
இந்திய அணியின் வீரர் ரிஷாப் பந்த் 80 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அறிமுக வீரரான வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார. அதிகபட்சமாக சுப்மான் கில் 91 ரன்களும், ரிஷப் பண்ட் 80 ரன்களும், புஜாரா 56 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர்.