Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய(20-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய பஞ்சாங்கம்

20-01-2021, தை 07, புதன்கிழமை, சப்தமிதிதி பகல் 01.15 வரை பின்பு வளர்பிறைஅஷ்டமி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.36வரை பின்பு அஸ்வினி.

 நாள் முழுவதும்மரணயோகம்.

 நேத்திரம் – 1.

 ஜீவன் – 1/2.

புதியமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

 எமகண்டம் காலை 07.30-09.00,

 குளிகன்பகல் 10.30 – 12.00,

 சுப ஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00,இரவு 07.00-09.00,  11.00-12.00

நாளைய ராசிப்பலன் –  20.01.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு திடீர் தனவரவு இருக்கும். வீட்டில் செலவு இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சிலருக்கு பிள்ளைகள் வழியில் அனுகூலம் பலன் கிடைக்கும். வியாபார ரீதியாக பயணங்களால் லாபம் இருக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர்கள் வகையில் தேவையில்லாத பிரச்சனை இருக்கும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடன் இருப்பவர்களால் அனுபவம் கிடைக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் நிலை இருக்கும். வருமானம் சிறப்பாக அமையும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும். குழந்தைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் சாதக பலன் இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கடன்கள் குறையும். வருமானம் உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு எதிலும் மன மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். வெளியூர் பயணம் செல்லக்கூடும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பீர்கள். புதிய முயற்சிகளில் தடங்கள் உண்டாகும். வீட்டில் கருத்து வேறுபாடு இருக்கும்.பகல் 12.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் வேண்டும். மதியத்திற்குப் பின் குழப்பம் இருக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு பகல் 12.36 மணி மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட இருக்கும்.நீங்கள் எதிலும் பிறரை நம்பி காரியத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். வெளியிடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருக்க வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வியக்கத்தக்க செய்திகள் வந்து கூடும். திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். உத்தியோகத்தில் அதிகம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும். பொன் பொருள் சேரும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் இருக்கும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதம் இல்லாமல் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் லாபத்தை கொடுக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சுமாராக அமையும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும்.எடுத்த காரியம் நிறைவேற உடன் இருப்பவர்களை  அனுசரித்து செல்ல வேண்டும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடைகள் உண்டாகும்.வீட்டில் உள்ளவர்களுடன் தேவையில்லாமல் மனஸ்தாபம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது வேண்டும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணவரவு சீராக இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கும் யோகம் கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினை இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் இருக்கும்.

Categories

Tech |