Categories
தேசிய செய்திகள்

சீக்கிரம் வர மாட்டியா டா ? கொடூரனாக மாறிய காதலன்…. சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!!

கேரளாவில் காதலியின் தம்பியை இஸ்திரி பெட்டியால் சூடு வைத்த காதலனின் வெறிச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மரடு பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண்ணை காதலித்து வருகிறார். இளம் பெண்ணின் தந்தை சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவியும் வேலையை விட்டுவிட்டார்.

இந்நிலையில் பிரின்ஸ் காதலியின் குடும்பத்தைப் கவனித்து கொண்டு அவர்களுடனே தங்கினார். ஒரு நாள் காதலியின் தம்பியான 8 வயது சிறுவனை பிரின்ஸ் கடைக்கு அனுப்பி வைத்தார். அந்தச் சிறுவன் கையில் வைத்திருந்த 200 ரூபாய் தொலைத்து விட்டான். அதைத் தேடிக்கொண்டே இருந்ததால் வீட்டிற்கு மிகவும் தாமதமாக சென்றான்.

இதனை கண்டு கோபமடைந்த பிரின்ஸ் அச்சிறுவனின் காலில் இஸ்திரி பெட்டியால் சூடு வைத்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.தகவலறிந்த போலீசார் பிரின்ஸை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |