Categories
மாநில செய்திகள்

பள்ளி திறந்த முதல் நாளே… மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் கழிவறைகளில் சீமை கருவேலமரங்கள் வளர்ந்துள்ளதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனை அடுத்து தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதுக்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று முதல் பள்ளிகள் திறப்பதற்கு பதிலாக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

இந்நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறைகள் பல மாதங்களாக பயன்படுத்தப்படுவதால், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கின்றன. அதனால் மாணவர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் திறந்த வெளியை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Categories

Tech |