புகையிலை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், சாத்தூர் டவுன் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகிக்கும் வகையில் இருந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் மேட்டமலை கிராமத்தை சேர்ந்த நாகராஜன், ஸ்ரீனிவாசன்,மற்றும் படந்தாலையை சேர்ந்த நேசகுமார், லதா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர்கள் புகையிலை விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 75 பாக்கெட் புகையிலைகளை காவல்துறையில் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.