Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸின் கணவர்… “செகண்ட் ஜென்டில்மேன்” பைடன் கொடுத்த அங்கீகாரம்…. குவியும் பாராட்டுக்கள்…!!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் கமலா ஹாரிஸின் கணவருக்கு ட்விட்டரில் புதிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடித்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவரும்  இன்று பதவியேற்கவுள்ளனர்.  எனவே வெள்ளை மாளிகையில் தற்போது இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது. மேலும் இதற்காக ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணியாற்றுவதற்காக பல நிர்வாகக் குழுக்கள் மற்றும் அதில் இடம் பெற இருக்கும் உறுப்பினர்கள் குறித்தும் அறிவித்து வருகிறார்.

இதில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜோபைடன் தலைமையில் இயங்க இருக்கும் அரசானது முன்பிருந்த அரசு நிர்வாகங்களை விட முற்றிலும் வேறுபட்டதாக இருக்கவேண்டும் என்பதற்காக அதிக கவனம் செலுத்தி வருகிறார். எனவே சமூகவலைதளங்கள் மிகப்பெரிய ஆதரவை பெற்றிருப்பதால் அதன் மூலமாக அரசின் நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்கவும் மற்றும் உடனடியாக அதற்கான தீர்வை காண்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே வெள்ளை மாளிகையில் முதன் முதலாக டிஜிட்டல் குழு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த டிஜிட்டல் குழுவிடம் ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் பதவி வகிக்கும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் போன்றவர்களின் சமூக வலைதளங்களின் கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் கமலா ஹாரிஸ்ஸின் கணவர் Emhoff ற்கு ட்விட்டர் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முதலில் “செகண்ட் ஜென்டில்மேன்” என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் சிறந்த தந்தை என்ற தகவலும் அதில் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் அவருக்குரிய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தற்போதுவரை செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும் இவரது கணக்கை 4.8 லட்சம் பேர் பின்தொடர்கிறார்களாம். மேலும் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய அங்கீகாரத்திற்கு அவரது உறவினர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் Emhoff, ஆண் பெண் போன்ற பாலின வேறுபாடுகள் இன்றி சமத்துவமான நடவடிக்கையில் மேற்கொள்வார் என்று நம்புவதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |