Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்புக்கு போகாம கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த சதீஷ்… வைரலாகும் வீடியோ…!!!

படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவை நடிகர் சதீஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .

இன்று பிரிஸ்பேன் நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ‌ . இந்நிலையில் நடிகர் சதீஷ் படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்க்கும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . அதில் இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் கடைசிநேர ஆட்டத்தை சதீஷ், பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன் ஆகியோர் செல்போனில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது படக்குழுவினர்களிடம் இருந்து ஒருவர் வந்து ‘ஷாட் ரெடி’ என கூற ‘நாங்களும் ஒரே ஒரு ஷாட்டுக்கு தான் வெயிட்டிங், கொஞ்சம் பொறுங்க’ என்று கூறுகிறார். அப்போது ரிஷப் பண்ட் வின்னிங் ஷாட்டான பவுண்டரியை அடித்தவுடன் சதீஷ், அசோக்செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் மூவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் . இதன்பின் ‘போகலாம் போகலாம் சார் ரெடி’ என படப்பிடிப்புக்கு தயாராகிறார் சதீஷ். தற்போது டுவிட்டரில் சதீஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Categories

Tech |