மது விற்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள உட்கோட்ட காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது வேம்பங்கோட்டை ரோட்டில் இருவர் மது விற்றுக் கொண்டிருந்தனர்.
காவல்துறையினரை கண்ட உடன் தப்பி ஓட முயற்சித்தனர். உடனே வடிவேல் காளிமுத்து ஆகிய இருவரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.