சென்னையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆகிறார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் சென்னையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 12 ஆயிரம் தற்காலிக தூய்மை பணியாளர்களையும் மீண்டும் பணியில் அமர்த்தி, அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக NULM திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த அவர்கள் சீன பிரதமர் வருகை, வர்தா, நிவர் புயல்கள் மற்றும் கொரோனா பேரிடர் போன்ற நெருக்கடி கால கட்டங்களில் பணியாற்றியவர்கள் என கூறியுள்ளார்.