Categories
சினிமா தமிழ் சினிமா

நெற்றியில் குங்குமத்துடன் வந்த சனம் ஷெட்டி… ரகசிய திருமணமா?…!!!

பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு சனம் ஷெட்டி நெற்றியில் குங்குமத்துடன் வந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சனம் ஷெட்டி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 3 பிரபலமான தர்ஷனும் இவரும் காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் . இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் சனம் செட்டி கலந்துகொண்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார் .

 

Hashtag “Sanam” Is Trending At Top In Twitter !! | Chennai Memes

ஆனால் மக்களின் பேராதரவு இருந்தும் சனம் ஷெட்டி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இந்நிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சனம் செட்டி நெற்றியில் குங்குமத்துடன் வந்திருந்தார். இதைப் பார்த்த பலரும் சனம் ஷெட்டி ரகசிய திருமணம் செய்து கொண்டாரா ?என கேள்வி எழுப்பி வந்தனர். பின்னர் கர்நாடகாவில் திருமணமாகாத பெண்களும் நெற்றியில் குங்குமம் வைப்பது வழக்கம் என்பது தெரியவந்தது. பிக்பாஸ் சனம் செட்டி கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |