Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு… வெளிநாடு செல்லும் படக்குழு…!!!

நடிகர் அஜித்தின் வலிமை படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .

Ajith Kumar Asks 'Valimai' Makers to Not Release the Film Until Pandemic  Ends

தற்போது பைக் ரேஸ் காட்சிகளை பூனேவில் படமாக்கி வருகின்றனர் . இதையடுத்து படத்தின் முக்கிய சண்டைக்காட்சியை படமாக்க படக்குழு தென் ஆப்ரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . அத்துடன்  படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் இந்த படம் அஜித் பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .

Categories

Tech |