நடிகை வரலட்சுமிக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை வரலட்சுமி தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் . சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிகை வரலட்சுமி நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது இவர் நடிப்பில் ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாராகியுள்ளது.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கிரிக்கெட் வீரருக்கு மனைவியாக போவதாக பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார் . ஏற்கனவே சரத்குமார்-ராதிகாவின் மகள் பிரபல கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . தற்போது வரலட்சுமியும் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .