Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் முடிந்த கையுடன்…”டைட்டில் வின்னரின் அடுத்த படம்”..!!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஏற்கனவே ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ ‘பகவான்’ மற்றும் ‘அலேகா’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களில் பகவான் மற்றும் அலேகா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வென்ற கையோடு ஆரிக்கு புதிய படம் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
இந்த படத்தை இயக்குனர் அபின் என்பவர் இயக்கி இருப்பதாகவும் சவுரியா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் ஏஆர் முருகதாஸ், சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஆரி ஜோடியாக நடிகை வித்யா பிரதீப் நடிக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ‘தடம்’, ‘மாரி 2’, உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |