தனுசு ராசி அன்பர்களே…! யாருக்கும் தேவையில்லாத வாக்குறுதியை கொடுக்க வேண்டாம்.
பொறுப்புகளை ஏற்று நடக்க வேண்டும். பொறுப்பாக இருந்து எதையும் செய்ய வேண்டும். முக்கிய செலவுக்காக சேமிப்பு பணம் குறைய கூடும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாற்றம் உண்டாகும். பயணங்கள் நல்ல அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். வெளிநாடு செல்லும் நண்பர்களுக்கு நல்ல சூழல் இருக்கும். எந்த தடையை தாண்டி தான் வெற்றி பெற முடியும். அனுகூலமான பலனை அடைவீர்கள். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது கவனம் வேண்டும். உற்சாகமாக இருக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடல் சோர்வை கைவிட வேண்டும்.கருத்து சொல்கிறேன் என்று வீண் பழியை சுமக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மாணவக் கண்மணிகள் தெளிவாக இருக்க வேண்டும்.
காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர்சாதம் அன்னம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.