Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனவரி 22… சென்னையில் அதிமுக ஆலோசனை கூட்டம்..!!

சென்னையில் ஜனவரி 22ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு தற்போது இருந்தே நிலவி தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் ஜனவரி 22ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் துணை முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, சசிகலா விடுதலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |