பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது 10 கோடி அபராதம் நீதிமன்றத்தில் செலுத்திய உள்ள நிலையில் அவர்கள் விடுதலை ஆவதற்கான தேதியை தற்போது அறிவித்துள்ளது.
சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக உள்ளதாகவும், இளவரசி பிப்ரவரி 5ஆம் தேதி விடுதலையாக உள்ளதாகவும், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனை அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.