கும்பம் ராசி அன்பர்களே…! மதிநுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் செழித்து பணவரவு நன்றாக இருக்கும். சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். புத்திரருக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். பஞ்சாயத்துக்களில் கலந்து கொள்ள வேண்டாம். யாருக்கும் கருத்துக்கள் சொல்ல வேண்டாம். தேவையில்லாத தர்மசங்கடத்திற்கு ஆளாகக்கூடும். யாரை நம்பியும் பணத்தை ஒப்படைக்க வேண்டாம். கடன் பிரச்சினை ஓரளவு கட்டுக்குள் இருக்கும். சந்தோஷமாக இருப்பீர்கள் தைரியமாக காணப்படுவீர்கள். துணிச்சலுடன் எதையும் செய்வீர்கள். தாராளமான தன வரவுகள் குடும்பத் தேவை பூர்த்தியாகும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு பொன்னான நாளாக இன்று இருக்கும். மாணவக் கண்மணிகள் நல்ல முறையில் பாடங்களை படிப்பார்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர்சாதம் அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5.அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் நீலம் நிறம்.