இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது .
இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் . இதையடுத்து பல திரைப்படங்களில் பணிபுரிந்த இவர் இன்று முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். தன் இசைத் திறமையால் ஒரு முன்னணி நடிகருக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர் யுவன் சங்கர் ராஜா .
இவரது வாழ்க்கையில் இரு முறை திருமணம் நடைபெற்று அந்த இரு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது . இதன் பின் மூன்றாவது முறையாக யுவன் சங்கர் ராஜா விற்கு திருமணம் நடைபெற்று தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது . இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவரது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது .