Categories
மாநில செய்திகள்

“திமுக முன்னாள் MP சிவ சுப்பிரமணியன் மரணம்” அதிர்ச்சியில் திமுகவினர்..!!

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் காலமானார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் சிவ சுப்பிரமணியன். இவர்  1989-ம் ஆண்டு ஆண்டி மடம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் 1998- 2004-ல் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது திமுவில் சட்ட திருத்தக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

Image result for அரியலூர் திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் காலமானார்

இந்நிலையில் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த அரியலூர் திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த சிவசுப்பிரமணியன் உடல் ஆண்டிமடத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக MLA கு. ராதாமணி உடல் நல குறைவால் உயிரிழந்திருக்கும் நிலையில் சிவ சுப்பிரமணியனும் காலமானதால் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |