Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் மாலத்தீவு சென்ற கே.ஜி.எப் நடிகர்… வைரலாகும் புகைப்படம்…!!!

‘கேஜிஎப்’ பட கதாநாயகன் யாஷ் குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

கன்னட திரையுலகில் பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாரான இந்த படம் தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது . இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார் .

சமீபத்தில் நடிகர் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘கே ஜி எஃப் 2’ படத்தின் அசத்தலான டீஸர் வெளியானது . மேலும் இந்த படத்தின் ட்ரைலரைக்  காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் . இந்நிலையில் ‘கேஜிஎஃப்’ ஹீரோ யாஷ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாலத்தீவுக்கு சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது .

Categories

Tech |