Categories
சினிமா தமிழ் சினிமா

தாயை தூக்கி வைத்து கொஞ்சும் ‘கோமாளி’ பட நடிகை… வைரலாகும் வீடியோ…!!!

கோமாளி படம் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘கோமாளி’ . இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே . இவர் நடிகர் ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் படத்திலும் நடித்துள்ளார்.

சம்யுக்தா ஹெக்டே

நடிகை சம்யுக்தா ஹெக்டே சமூக வலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் நடிகை சம்யுக்தா தன் தாயை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு கொஞ்சிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது .

Categories

Tech |