Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிமுக ஒற்றுமையா இருக்க மாட்டாங்க…. அவங்களுக்குள்ள 15 பிரிவு வரும்…. திமுக பொறுப்பாளர் பேட்டி…!!

சசிகலா சிறையிலிருந்து விடுதலையானால் அதிமுக 15 பிரிவுகளாக பிரிய வாய்ப்புள்ளது  என்று திமுகவின் மாவட்ட பொறுப்பாளர் கூறியுள்ளார். 

திமுகவின் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் நாளை தேனியில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். மேலும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அடித்து கொலைசெய்ததாக  மக்களிடையே பேசி வருகிறார். ஆனால் ஜெயலலிதா மரணம் சம்பந்தப்பட்ட நீதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகாமல் அதற்குரிய விளக்கமும் தெரிவிக்காமல் காலத்தை தள்ளி வருகிறார்.

எனவே திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மங்களை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவார். மேலும் சசிகலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு 15 பிரிவுகளாக பிரிவார்களே தவிர ஒற்றுமையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை அறிவித்த ஓபிஎஸ், கோடிக்கணக்கில் பணம் செலவளித்து பத்திரிகைகளில் தன்னைப் பற்றியே விளம்பரபடுத்தி வருகிறார். இதனால் இவர்களுக்குள் பிரச்னை இருப்பது வெளிப்படையாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |