Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அமைச்சர் உடல்நலம் சீரியஸ்… ஈபிஎஸ், ஓபிஎஸ் நேரில் வருகை..!!

அமைச்சர் காமராஜரின் உடல்நலம் மோசமாக உள்ளதால் அவரை காண முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வந்துள்ளனர்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று உள்ளனர்.

Categories

Tech |