Categories
டெக்னாலஜி பல்சுவை

ஹூண்டாய் நிறுவனத்தில்…”Buy One, Get One Free”… கார்களுக்கு அதிரடி ஆஃபர்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கார் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மொத்தமாக 133 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஊரடங்கு காரணமாக விற்பனை மந்தமானது முக்கிய காரணம். உலகின் பல்வேறு மூலைகளில் கொரோனா காரணமாக தொழில்கள் முடங்கி, பல லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதனால் கார் விற்பனை மோசமான நிலையில் இருந்தது. இத்தகைய நிலையைத் தொடர்ந்து நிறுவனங்கள் மூட வேண்டிய நிலையும் உருவானது.

இதைத்தொடர்ந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பழையநிலைக்கு உலக நாடுகள் திரும்பி வரும் நிலையில், கார் வாங்குவதை அதிகப்படுத்த ஒரு யுக்தியை நிறுவனங்கள் கையாண்டு வருகின்றது. பிலிப்பைன்சில் ஹூண்டாய் Santa Fe சொகுசு காரை வாங்கினால் Reina Sedan கார் இலவசமாக வழங்கப்படும். இந்த Santa Fe சொகுசு காரின் விலை சுமார் 38 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இலவசமாக வழங்கப்படும் Reina Sedan காரின் விலையோ 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் , இல்லையெனில் 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Accent காரை இலவசமாக பெறலாம். மக்கள் இதை பயன்படுத்தி ஒரு காரை வாங்கி இரண்டு காரை பரிசாக பெறலாம். இவ்வாறு செய்தால் விற்பனை விகிதம் அதிகமாகும் என்றும், வீழ்ச்சியிலிருந்து மீள முடியும் என கார் நிறுவனங்கள் இத்தகைய யுக்தியை பயன்படுத்தி வருகின்றனர்.

Categories

Tech |