இன்று அதிபர் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில் முன்பை விட இம்முறை பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்பர். 2009ஆம் வருடம் ஒபாமா பதவியேற்ற போது 20 லட்சம் மக்கள் வருகை தந்ததாக முந்தைய பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இம்முறை அதிபராக பதவி ஏற்க இருக்கும் பைடனின் குழுவினரே மக்கள் தலைநகருக்கு வருவதை தவிர்த்து விடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த 6ஆம் தேதி நடந்த வன்முறைக்குப் பிறகு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நடைமுறையில் மட்டும் 1981 ஆம் வருடம் முதல் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதாவதுபைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டிடத்தின் முன்பு வைத்து பதவி ஏற்க உள்ளனர். அச்சமயத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி 200 பேர் மேடையில் அமர உள்ளனர்.
கொரோனா தோற்று இல்லையென்றால் இவ்விழாவில் பங்கேற்க இரண்டு லட்சம் பேருக்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இம்முறை ஆயிரம் பேருக்கு மட்டுமே விழாவுக்கான டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பங்கேற்பவர்கள் முக கவசம் அணிந்து குரல் பரிசோதனை மேற் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பதவியேற்புக்கு பிறகு துணை ராணுவத்தினர் இசை முழங்க அதிபர் ஜோ பைடனையும் துணை அதிபர் கமலா ஹாரிஸையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்வர்.