அமைச்சர் காமராஜுவை துணை முதலமைச்சர் மற்றும் முதலமைச்சர் நேரில் சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜு கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
அவருக்கு ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்றுள்ளனர். அமைச்சரின் கவலைக்கிடமான செய்தியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.