Categories
லைப் ஸ்டைல்

மாரடைப்பை தவிர்க்க வேண்டுமா…? அப்போ இந்த 5 விஷயங்களில் அலெர்ட்…!!

மாரடைப்பை தவிர்ப்பதற்கான சில விஷயங்கள் என்னவென்று இப்போது இங்கே பார்க்கலாம்.

உலக அளவில் பெரும் அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது மாரடைப்பு எனப்படும் ஹார்ட் அட்டாக். இதன் காரணமாக திடீர் திடீரென்று தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்கள் உயிரிழப்பது பற்றிய செய்தி கேட்டாலே அதிலிருந்து தப்பிப்பதற்கு எந்த ஒரு வழியும் இல்லையா என்று நம் உள்ளுணர்வு கேட்பதுண்டு. இதற்கு சில வழிகளும் இருக்கிறது. ஐம்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்களை பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

முதலில் புகைப் பழக்கம்:

சிகரெட் புகைக்கும் பழக்கம் இதய நோய் வருவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை சிகரெட் பிடிக்கும் போது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு எட்டு நிமிடங்களுக்கு விரைவுபடுத்துகிறது.

உடல் பருமன்:

இது நம்மால் தவிர்க்க கூடிய ஒன்றாக இருந்தாலும் உடல் பருமன் காரணமாக இதய நோய் மட்டுமல்லாமல் சர்க்கரை நோய், பக்கவாதம், மூட்டுவலி, கல்லீரல் செயலிழப்பு போன்ற பல்வேறு நோய்கள் வருகின்றன. உடல் பருமனுடன் சர்க்கரை நோயும் சேர்ந்து வரும்போது ரத்தக் குழாய்கள் வீங்கி விடுகின்றன. இது மாரடைப்புக்கு வழி வகுக்கிறது.

கொழுப்பு:

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது ரத்த குழாய்களில் படிந்து ரத்தக் குழாய் சுற்றளவைக் குறுக்கி விடுகின்றது. இதனால் எளிதில் மாரடைப்பு வந்து விடுகிறது.

சர்க்கரை நோய்:

சர்க்கரை நோய் வந்தால் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். எனவே சர்க்கரை அளவு அதிகரித்து இரத்த குழாய் சுவரைப் பாதித்து மாரடைப்பை வரவைக்கிறது.

மன அழுத்தம்:

இதயநோய் வர மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் அதிகரிக்கும் போது கார்டிசோல் என்னும் ஹார்மோன் அதிகமாக சுரந்து ரத்தக் குழாய்களை பாதித்து மாரடைப்பு வருகிறது.

Categories

Tech |