சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் கிராமத்தை உருவாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் சீன ராணுவம் சில அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் 101 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தையே உருவாக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரத்தியேகமான இதுகுறித்த செயற்கைகோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் சுமார் 4.5 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கட்டுமானம் அமைந்துள்ளதாக வல்லுநர்கள் பகுப்பாய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.