தயிரானது உடலுக்கு எவ்வளவு அதிகமான நன்மைகள் கொடுக்கும் என்பதை இப்பொது பார்க்கலாம்.
தயிர் ஒரு அருமருந்து. மேலும் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். இதில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் உள்ளது. தயிர் விரைவாக ஜீரணம் ஆகக்கூடியது. மேலும் இதன் சுவையிழந்த நாவிற்கு சுவையூட்டும். தயிரை சூடாக்கி பயன்படுத்தக்கூடாது. மழைக்காலத்தில் இரவில் தயிர் சேர்க்க கூடாது. குளிர்காலத்தில் தினமும் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்