Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் முக்கியம்… நகர வீதிகளில் ஊர்வலம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

கடலூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் போலீசார் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களில் சென்றனர்.

கடலூர் மாவட்டத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவையொட்டி போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் இருசக்கர வாகனத்தை போலீசாருடன் ஓட்டி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து ஊர்க்காவல் படையினர், தன்னார்வ அமைப்பினர் மற்றும் போலீசார் அனைவரும் இருசக்கர வாகனங்களில் நகர முக்கிய வீதிகளில் ஹெல்மெட் அணிந்தவரே சென்றுள்ளனர்.

அதன்பின் துண்டு பிரசுரம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்தப் பேரணியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சப்-இன்ஸ்பெக்டர் எழில் தாசன், மகாலிங்கம், மணிகண்டன், கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் பிற போலீசார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Categories

Tech |