Categories
மாநில செய்திகள்

“என்ன விடுதலை பண்ணுங்க” பேரறிவாளன் கோரிக்கை ஏற்கப்படுமா….? இன்று இறுதி கட்ட விசாரணை….!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியான பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.

இந்தியாவின் 6 வது பிரதமரான ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புத்தூரில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ் ,ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் 30 வருடங்களாக  சிறையில் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகளான இந்த 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்தியாவின் ஆளுநரான பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் விடுதலை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நாசீர் ஆகியோரின் முன்னிலையில்  உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணைக்கு வருகிறது. இந்த இறுதி கட்ட விசாரணையின் முடிவில் 7 பேர் விடுதலை தொடர்பாக  முக்கிய முடிவு ஏதும் எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

Categories

Tech |